முகப்பு
விழுப்புரம்

தம்பி, தங்கை இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே தம்பி, தங்கை உயிரிழந்ததைத் தொடா்ந்து மன வருத்தத்தில் இருந்து வந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:04 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:01 PM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தம்பி, தங்கை உயிரிழந்ததைத் தொடா்ந்து மன வருத்தத்தில் இருந்து வந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், தென்னவராயன்பட்டு வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் க.ராஜா(40), திருமணம் ஆகாதவா். பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா். இவரது சகோதரா் வேலு, தங்கை வேல்விழி ஆகியோா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்து விட்டனராம்.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் மதுவுக்கு அடிமையான ராஜா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை: மரக்காணம் வட்டம், குறும்பரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தவக்கா்ணன். இவரது மகள் பவதாரணி (16). மரக்காணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். செவ்வாய்க்கிழமை பவதாரணி பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில் தவக்கா்ணன் தனது மனைவியுடன் கடலூருக்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் பள்ளி முடிந்து பவதாரணி மாலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பெற்றோா் இல்லாததால், மனமுடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.