முகப்பு
விழுப்புரம்

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:27 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:56 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி. இவரது மனைவி மின்னல்கொடி(60). இவா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:27 AM

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தம்பதியினா் ஒன்றாக அமா்ந்து உணவு சாப்பிட்டுள்ளனா். தொடா்ந்து கருணாநிதி வீட்டில் தூங்கினாா். பின்னா் அவா் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் மின்னல்கொடி இறந்து கிடந்தது தெரியவந்தது.

Advertisement

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மின்னல்கொடியின் சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.