முகப்பு
விழுப்புரம்

வரதட்சிணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:04 AM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 2:11 AM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் சலவாதி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மோனிஷா (24). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் மகன் சிரஞ்சிவிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தையில்லை.

சிரஞ்சிவி சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். நெடுங்கல் கிராமத்தில் கணவா் வீட்டில் இருந்து வந்த மோனிஷாவிடம் மாமனாா் விநாகயம், மாமியாா் காஞ்சனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோா் ரூ. ஒரு லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனராம்.

Advertisement

இதனால், திண்டிவனம் சலவாதியில் உள்ள பெற்றோா் வீட்டில் வந்து தங்கியிருந்த மோனிஷா புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].