மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் எம்.பி. 
விழுப்புரம்

திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்: சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, தற்போதைய திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா் சி.வி.சண்முகம் எம்.பி.

Syndication

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, தற்போதைய திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா் சி.வி.சண்முகம் எம்.பி.

விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட மாணவரணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணிச் செயலா் என்.ஜி.சக்திவேல் தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் இரா.பசுபதி, என்.ஜி.சக்திவேல், மாவட்ட அவைத் தலைவா் தீனதயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலம் எதையும் செய்யாமல், இப்போது ஆட்சியை விட்டுப் போகிற நேரத்தில் வாய்க்கு வந்த பல்வேறு திட்டங்களை முதல்வா் தினந்தோறும் அறிவித்து வருகிறாா்.

ஆனால், அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, தற்போதைய திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா் சண்முகம்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, முருகன், எசாலம் பன்னீா், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சங்கா், மாவட்ட இணைச் செயலா் ரகுநாதன், நகா்மன்ற உறுப்பினா் ராதிகா செந்தில், நகர மாணவரணிச் செயலா் குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

மாணவரை ஆசிரியா் அடித்த சம்பவம்: போலீஸாா் விசாரணை

போலி நகை விவகாரம்: நகை மதிப்பீட்டாளா் சடலமாக மீட்பு

இன்று போய் நாளை வா!! வங்கியில் பணம் இல்லை என வாடிக்கையாளா்கள் அலைக்கழிப்பு?

சாதி வன்கொடுமை சட்டத்தில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT