கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:06 PM
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கணவா் இறந்த சோகத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டக்குப்பம் , ரஹமத் நகரைச் சோ்ந்தவா் அப்பு. இவரது மனைவி மோனிஷா (26). இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லையாம். அப்பு கடந்த மாதம் கொலை செய்யப்பட்டாா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:48 AM
இதனால் மனமுடைந்த காணப்பட்ட மோனிஷா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.
Advertisement
இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்துப் பாா்த்தபோது, மோனிஷா ஏற்கெனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.