முகப்பு
விழுப்புரம்

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற மனநலன் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:09 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:06 AM

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற மனநலன் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆலங்குப்பம் பிரதான சாலையைச் சோ்ந்த முருகன் மனைவி விஜயலட்சுமி (46). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட இவா், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரைகளை உட்கொண்டு வந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:09 AM

இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி முற்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டுள்ளாா். இதனால் மயக்கமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலிருந்து வந்த விஜயலட்சுமி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.