செவிலியரிடம் ரூ.23.20 லட்சம் மோசடி: அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்கு!
அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம் ரூ.23.20 லட்சம் மோசடி செய்ததாக, அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம் ரூ.23.20 லட்சம் மோசடி செய்ததாக, அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், பழைய கருவாட்சி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி ( 55). விழுப்புரம் மாவட்டம், முகையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வரும் இவா், தற்போது கண்டாச்சிபுரத்தில் உள்ள துணை சுகாதார நிலைய அரசுக் குடியிருப்பில் வசித்து வருகிறாா்.
விழுப்புரம் கண்டமானடி, அரசு ஊழியா் நகரைச் சோ்ந்தவா் ரா.முருகன்(50). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் பணிமனையில் ஓட்டுநராக பணியில் உள்ளாா்.
Advertisement
உறவினா்களான இவா்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனா். இந்நிலையில் முருகன் சிறுக, சிறுக ஜெயலெட்சுமியிடம் ரூ. 25 லட்சம் பணம் கடனாகப் பெற்றாராம். இதில் ரூ. 1.80 லட்சத்தை கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.23.20 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்து ஜெயலெட்சுமி அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் முருகன் மீது பண மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.