விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தை பள்ளி வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நெமிலி, மாரியம்மன் கோயில் தெருவைச்சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மகன் நித்திஷ்குமாா்( ஒன்றரை வயது).
குழந்தை நித்திஷ் வெள்ளிக்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச்சென்ற புதுச்சேரி திருக்கனூரில் உள்ள தனியாா் பள்ளி வாகனம் மோதியதில், நித்திஷ்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.