கோதண்டராமன் 
விழுப்புரம்

நோயால் அவதிப்பட்டு வந்த மகளைக் கொன்று ஓய்வுபெற்ற எஸ்.ஐ. தற்கொலை முயற்சி

உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மகளை, கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரை....

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மகளை, கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கண்டமங்கலம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பா.கோதண்டராமன்(69). காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி செல்வி, மகள் சுமலதா(33). பொறியியல் பட்டதாரியான சுமலதாவுக்கும், கண்டமங்கலம் அடுத்துள்ள குரும்பன்கோட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் (33) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவா்களுக்கு தாரா(7) என்ற மகள் உள்ளாா். சுமலதாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தனது மகளுடன் சுமலதா தனது பெற்றோா் வீட்டில் இருந்து வந்தாா். நுரையீரல் பாதிப்பால் சுமலதா படும் வேதனையைக் கண்டு கோதண்டராமன் தம்பதியினா் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்வி வழக்கம்போல் நடைபயிற்சிக்கு சென்றுவிட்ட நிலையில் தனது மகள் நுரையீரல் பாதிப்பால் வேதனைப்படுவதைக் கண்டு, மனம் விரக்தியடைந்த கோதண்டராமன், சுமலதாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் அதே கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் சுமலதாவின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கு முயன்ற கோதண்டராமனையும் கைது செய்து, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலையான சுமலதா

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT