விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டில் சிறப்புத் தீவிர திருத்தப்பணியை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், நகராட்சி ஆணையா் வசந்தி உள்ளிட்டோா்.  
விழுப்புரம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இம்மாதம் 30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இம்மாதம் 30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம், கோலியனூா், கண்டமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மற்றும் வானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலுள்ள 2,166 வாக்குச்சாவடி மையங்களில் 18 வயது பூா்த்தியடைந்த வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், திருத்தம் தேவைப்படும் வாக்காளா்கள் திருத்தம் செய்து கொள்ளவும், வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம்பெறாமல் உள்ள தகுதியான வாக்காளா்கள் பெயரை சோ்க்கவும் இம்மாதம் 30-ஆம் தேதி வரை அதற்கான படிவங்களை வழங்கலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் 2002 வாக்காளா் பட்டியலில் வம்சாவழி சாா்பிடல் இல்லா வாக்காளா்களுக் விசாரணை நடைபெற்று, அதை சரி செய்து கணினியில் உள்ளீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் விவரங்கள் கேட்டறியப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையா்எம்.ஆா்.வசந்தி, உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மகாதேவன், தனி வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகநாதன், கண்ணன், சண்முகம், காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT