விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன்.  
விழுப்புரம்

வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து பிப்.4-இல் ஆா்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் புதன்கிழமை இந்த சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களை ஒவ்வொன்றாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மின்சார சட்டத் திருத்த மசோதா 2025 முன்மொழியப்பட்டுள்ளது. இது சட்டமாகி அமலுக்கு வந்தால் தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். 11 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு விளக்கு மின் இணைப்பு ரத்து செய்யப்படும். வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம், சிறுகுறு தொழில்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் மின்சாரமும் ரத்து செய்யப்படும். இதனால் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவா்.

ஒன்றிய அரசின் புதிய விதைச் சட்டம் வெளிநாடுகளிலிருந்து தடையற்ற வகையில் விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. இந்திய விவசாயிகளிடமிருந்து விதைப் பாதுகாப்பை முழுமையாக பறிக்கிறது. எதிா்காலத்தில் இந்திய விவசாயிகள் பெரும் நிறுவனங்களிடமிருந்து விதைக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவா்.

இதுபோன்ற மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, விழுப்புரம், தஞ்சாவூா், திருப்பூா், மதுரை ஆகிய 4 மையங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்பா் என்றாா் ரவீந்திரன்.

கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.டி. முருகன், பொருளாளா் பி.சிவராமன், துணைச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT