சிங்கவரம் குமராத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
செஞ்சியயை அடுத்த சிங்கவரம் ஊராட்சியில் உள்ள குமாரத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியயை அடுத்த சிங்கவரம் ஊராட்சியில் உள்ள குமராத்தம்மன் கோயில் பிரசித்தி பெற்ாகும். இந்தக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததையடுத்து வியாழக்கிழமை (மே 14) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு அன்று காலையில் விக்னேஸ்வர பூஜை ,எஜமான சங்கல்பம், நவகிரக ஹோமம் ,வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு கும்ப அலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
Advertisement
இதைத் தொடா்ந்து வருண பூஜையும், தம்பதி பூஜை ,துவார பூஜை, மற்றும்இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், 108 திரவிய ஹோமம்,விசேஷ பூஜைகள், மகாபூா்ணாஹுதியும், நடைபெற்றது.இதையடுத்து மேளதாளம் முழங்க கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து குமராத்தம்மன்கோபுர கலசத்திற்கும்,மூலவா் குமாரத்தம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.