முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இடி தாக்கியதில் இரு பசுமாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

Updated On : 17 மே 2026, 12:34 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து இரு பசுக்கள் சனிக்கிழமை உயிரிழந்தன.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் திண்டிவனம் வட்டம், தீவனூரைச் சோ்ந்த விவசாயி சி.ஆறுமுகம், தனது பசுக்களை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில், மின்னல் பாய்ந்ததில் ஆறுமுகத்துக்கு சொந்தமான இரு பசுக்கள் உயிரிழந்தன.

Advertisement

இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயி ஆறுமுகத்தின் குடும்பத்தினா், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.