கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் நாஞ்சில்சம்பத் பேச்சு
இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை கொள்கை பரப்புச்செயலர் நாஞ்சில்சம்பத் தெரிவித்தார்.
தேர்தல்கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் நாஞ்சில்சம்பத் பேச்சு
இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை கொள்கை பரப்புச்செயலர் நாஞ்சில்சம்பத் தெரிவித்தார்.
இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை கொள்கை பரப்புச்செயலர் நாஞ்சில்சம்பத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலுக்கு வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பொன்னேரியில் உள்ள ஹரிஹரன் பஜார் கடை வீதியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா தலைமை வகித்தார். அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலை வகித்தார் கூட்டத்தில் அதிமுக துணை கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில்சம்பத் பேசியது. செல்லும் இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறுகளை அள்ளிவீசி ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள இந்திய கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. 17ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இதனை தடுத்ததா 2013-ம் ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 600பேர் கைது செய்யப்பட்டனர். வெளியுறவு கொள்கையில் இந்தியா தோற்றுப் போயுள்ளது. சுவீஸ் வங்கியில் இருக்கும் பலகோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்க மத்திய காங்கிரஸ் அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது.
நீங்கள் ஏன் நரேந்திரமோடியை விமர்சிக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். 10ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸில் குப்பை உள்ளது. அந்த குப்பையைத்தான் நாங்கள் அள்ளுகிறோம். நான் கேட்கிறேன் நரேந்திரமோடி பிரதமராக வந்தால் அவருக்கு நீங்கள் ஆதரவு தரமாட்டீர்களா இந்திராகாந்தி கேட்டதற்காக அவரிடம் கருணாநிதி கட்சத்தீவை விட்டுகொடுத்தார் என தெரிவித்தார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பிரபாகரன், மீஞ்சூர் ஒன்றிய செயலர் மோகனவடிவேல், பொன்னேரி நகர செயலர் உபயதுல்லா, அவைத் தலைவர் மோகனசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலர் செல்வகுமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.