(கோப்பு படம்) 
தேர்தல்

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

”யார் இந்த ராகுல் காந்தி” என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

DIN

ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய யூடியூப் விடியோ கடந்த ஒரு மாதத்தில் 30 கோடி பார்வைகளை எட்டியுள்ளது.

தொழிலதிபர்கள் அம்பானி, அதானி குறித்து பேசாமல் அமைதி காப்பதற்கு காங்கிரஸ் எவ்வளவு பணம் வாங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் ,"வணக்கம் மோடி ஜி பயந்துவிட்டீர்களா. நீங்கள் மக்களுக்குத் தெரியாமல் தான் அம்பானி, அதானி குறித்துப் பேசுவீர்கள். முதன்முறையாகப் பொதுவெளியில் அம்பானி, அதானி குறித்துப் பேசியுள்ளீர்கள். அவர்கள் லாரியில் பணம் தருவது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது. இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா? என பேசியிருந்தார். இந்த தொழிலதிபர்களுக்கு மோடி எவ்வளவு பணம் வழங்கினாரோ, அதே தொகையைக் காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வழங்கும். பாஜக 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியது, நாங்கள் கோடிக்கணக்கானவர்களை உருவக்குவோம்" எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரசியல் செய்தி சேனல்களைவிட ராகுல் காந்தியின் இந்த விடியோ அதிகளவில் வைரலாகியுள்ளது. இது பிரதமர் மோடியின் யூடியூப் பார்வைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், எக்ஸ் வலைதளத்தில் "யார் இந்த ராகுல் காந்தி!" என்ற ஹேஷ்டேக்குடன் ராகுல் காந்தி பேசிய விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

‘செத்த பொருளாதாரம்’.. கொன்றதே மோடிதான்! - ராகுல் காட்டம்

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT