முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

குறைந்த விலையில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்த விலையில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவியை உருவாக்கி, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்த விலையில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவியை உருவாக்கி, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளனர்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்கள் பி.டேனியல், டி.பாலாஜி, டி.டிட்டோ, ஆர்.ஆர்த்தி. இவர்கள் துறைத் தலைவர் சிவக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பள்ளிகொண்ட ராஜசேகரன், பேராசிரியர் பெருமாள் ஆகியோர் ஆலோசனையின்படி, மிக்குறைந்த விலையில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவியை உருவாக்கியுள்ளார்கள்.

மாணவர்களின் இந்த புராஜக்ட்க்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு பரிசு ரூ.5 ஆயிரம் கிடைத்துள்ளது.இந்த நவீன மின்னணுக் கருவியினைக் கொண்டு வங்கிகள், வீடுகளில் நுழைந்து நடைபெறும் திருட்டு, அலுவலகத்தில் திடீரென பிடிக்கும் தீ விபத்து, தீப்பிடித்தாலும் அதனை நீரைத் தெளித்து அணைக்கவும், தேவையில்லாமல் பயன்படுத்தும் மின்சாரத்தை தடை செய்து மின்சாரத்தைச் சேமிக்கவும் முடியும்.

இந்தக் கருவியில் நடமாட்டத்தை உணர்ந்து அறிவிக்கும் சென்சார்கள், தீ பிடிப்பதால் உயரும் வெப்பத்தை உணர்ந்து அறிவிக்கும் சென்சார்கள், ஆர்டினோபோர்டு, என்.ஆர்.எப். மாடுல் உள்ளிட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த உபகரணத்தை வாங்கி வீடுகளில் பொருத்தும்போது, பி.ஐ.ஆர். சென்சார் உள்ளே யாரும் வாசல் அல்லது ஜன்னல் வழியே வருவதை உணர்ந்து அலாரம் அடித்து அறிவிக்கும். அதே சமயம் அந்தக் கதவிற்குப் பின் ஒரு இரும்புக் கதவு பொருத்தி இருந்தால் அதனை மூடி, திருடனை அதற்குப் பின் நுழைய விடாது.

மாணவர்களின் இந்த சமுதாயத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்பை வெள்ளிக்கிழமை துணை வேந்தர் ச.சரவணசங்கர் பார்வையிட்டு பாராட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →