தமிழகத் தேர்தல் களம் 2016

திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என்பது வெறும் பசப்புரை: கருணாநிதி நகைச்சுவை

திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது பரப்புரையே அல்ல.. வெறும் பசப்புரை என்று கருணாநிதி நகைச்சுவையாக பேட்டியளித்துள்ளார்.

தினமணி

சென்னை : திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது பரப்புரையே அல்ல.. வெறும் பசப்புரை என்று கருணாநிதி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக தலைவர் கருணாநிதி பேட்டியளித்திருந்தார்.

அப்போது, செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு கருணாநிதி நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.

அதாவது, திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வதுபற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, திமுகவில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களே இல்லை என்று கூறுவது பரப்புரையே அல்ல.. அது வெறும் பசப்புரை.

திமுகவில் தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இளைஞர்களின் அணியால் உருவானதுதான் திமுகவே என்று கருணாநிதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT