புதிய அனுபவம் கிடைக்கும். கடுமையாக உழைப்பீர்கள். பணவரவும் அதிகரிக்கும். சொத்துகளில் வருமானம் வரத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். வியாபாரிகள் செலவழிக்க நேரிடும். விவசாயிகள் வயல்வரப்பில் பிரச்னைகளில் முடிவை எட்டுவீர்.
அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் உதவியால் கைநழுவிய ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். பெண்கள், குடும்பத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.