வார பலன்கள் - கன்னி
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
குடும்பத்தினரிடம் அன்னியோன்யம் அதிகரிக்கும். அணுகுமுறையை நேரத்துக்கேற்ப மாற்றிக் கொள்வீரகள். பொருளாதாரம் சீராகும். புகழ் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பாராட்டும்படி நடப்பீர்கள். வியாபாரிகளின் கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் கொட்டும். அரசியல்வாதிகள் மேலிட ஆதரவை பெறுவீர்கள்.
கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினரின் ஒற்றுமையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோர் மனநிலையை அறியும் சந்தர்ப்பம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.