ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு செவ்வாய் தசையில் சனிபுக்தி நடைபெறுகிறது. கிட்னியில் பாதிப்பு இருப்பதாகவும் மருந்து மாத்திரைகளால் சரியாகுமென்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சரி ஆகுமா? அடுத்து ராகு தசை எப்படி இருக்கும்? ராகு, புதன் சாரம் (ஆயில்ய நட்சத்திரம்) இருப்பதால் இந்த தசை எப்படி இருக்கும்? தொழிலில் மேன்மை, வீடுகட்டும் யோகம் உண்டா?- விஜயகுமார், செங்கல்பட்டு

DIN

உங்களுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பென்றாலும் அவர் நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். சுக பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் மிதுன ராசியில் இருப்பது ஓரளவுக்கு சிறப்பென்றே கூற வேண்டும். பாக்கியாதிபதியான புதபகவான் எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். லக்னாதிபதியுடன் ராகுபகவானும் சனிபகவானுடன் கேதுபகவானும் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. செவ்வாய்பகவான் நட்பு ஸ்தானத்தில் லக்னாதிபதியான  சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் துலாராசியை அடைகிறார். அதனால் இந்த தசை முடிவதற்குள் சொந்த வீடு அமையும். உடல் உபாதைகள் அறுவை சிகிச்சை இன்றி மாத்திரையாலேயே தீர்ந்துவிடும். ராகுபகவான் தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து இன்னும் மூன்றாண்டுகளுக்கு தசையை நடத்துதிறார். ராகுபகவானுக்கு சுக்கிர, சனி பகவான்களின்  சுப பலமும் சேர்ந்து கிடைக்கும். அதோடு அவர்அதிபலம் பெற்றபாக்கியாதிபதியின் சாரத்தில் இருப்பதால் முழுமையான பலம் பெற்றவர் என்று கூற வேண்டும். அதனால் ராகு பகவானின் தசை சீரும் சிறப்புமாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT