ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரர் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எங்கு, எப்போது அமையும்? உடல் ஆரோக்கியம், ஆயுள் பலம், புத்திர பாக்கியம் எவ்வாறு உள்ளது? சகோதரியின் திருமணத்திற்கு உதவுவாரா? பெற்றோரை கடைசி வரை காப்பாற்றுவாரா? - வாசகி, காட்பாடி

DIN

உங்கள் சகோதரர் மகனுக்கு தனுசு லக்னம், துலா ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியான குருபகவானின் தசையில் களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கிறது. லக்னத்தில் ராகுபகவான் இருப்பது குறை. மற்றபடி பெரிதாக குறை என்று எதுவும் இல்லை. அவருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு நிலையான உத்தியோகம் அமையும். பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி அமர்ந்திருப்பதால் பெற்றோருக்கு இறுதிவரைஆதரவாக இருப்பார். சர ராசிகள் வலுவாக உள்ளதால் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். மற்றபடி சகோதரிக்கும் ஆதரவாக இருப்பார். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். ஆயுள் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT