ஜோதிட கேள்வி பதில்கள்

பி.இ., படித்துள்ள என் மூத்த மகனுக்கு நிரந்தர வேலை இன்னும் கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைக்குமா? அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? பி.இ., படித்துக் கொண்டிருக்கும் என் இரண்டாவது மகனுக்கு வேலை, எதிர்காலம் எப்படி இருக்கும்?- தரணி, அரும்பாக்கம்

DIN

உங்கள் மூத்த மகனுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். லக்னாதிபதி, குடும்பாதிபதி, களத்திர தொழில் ஸ்தானாதிபதி ஆகியோர் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. புத ஆதித்ய யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளதால் உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டி விடுவார். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் இரண்டாம் மகனுக்கு பாக்கிய ஸ்தானமும் லாப ஸ்தானமும் வலுவாக உள்ளன. அவரை மேலாண்மைத் துறையில் மேற்படிப்பை படிக்க வைக்கவும். தனியார் துறையில் சிறப்பான உத்தியோகம் கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT