ஜோதிட கேள்வி பதில்கள்

எனது வாழ்க்கையில் இதுவரை எந்தவிதமான மேன்மையும் அடையவில்லை. எப்போது முன்னேற்றம் ஏற்படும்? லக்னாதிபதியை வலிமைபடுத்த கல் வைத்த மோதிரம் அணியலாமா? ராகு- கேது பாதிப்புண்டா? - வாசகர், தான்தோன்றிமலை

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், மீன ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றிருந்தாலும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் புதபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். சுக ஸ்தானத்தில் முதல் அரசுக் கிரகமான சூரியபகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சூரியபகவானின் தசை நடக்கிறது. இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு உங்கள் வாழக்கையில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். ராகு- கேது பகவான்கள் சுயசாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பாகும். அஷ்டலட்சுமி யோகமும் உண்டு. எந்த நவரத்தின கல்லையும் அணிய வேண்டிய அவசியமில்லை. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். மேற்கூறிய காலகட்டத்திற்குப்பிறகு வாகனத் தொழில் ஏற்றதாக அமையும். 3,6,12 -இல் பாபக் கிரகங்கள் இருப்பதால் நன்மையே. பாதிப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT