ஜோதிட கேள்வி பதில்கள்

நான் பல ஆண்டுகளாகவே நிரந்தர வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். வருமானம் இல்லாததால் திருமணமும் செய்யவில்லை. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? சொந்த வீடு வாங்க முடியுமா? - வாசகர், மயிலாடுதுறை

DIN

உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் 3- ஆம் பாதம் என்று வருகிறது. லக்னத்தில் தனாதிபதியான சூரியபகவானும் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியான குருபகவானும் இணைந்து இருப்பது சிறப்பு. இதனால் சிவராஜயோகம் உண்டாகிறது. சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆயுள் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு இந்த ஆண்டிலேயே நிரந்தர தொழில் அமையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். 2022 -ஆம் ஆண்டுக்குப்பிறகு சொந்த வீடு அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT