ஜோதிட கேள்வி பதில்கள்

எனது பெண் ஐ.டி., நிறுவன வேலையில் இருந்து நின்று விட்டார். மீண்டும் எப்போது பணியில் சேர்வார்? எனது மகன் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். அவன் எந்தப் பணியில் சேர்வான்? நான் தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா? - வாசகர், தர்மபுரி

தினமணி

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், கடக ராசி. தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். சுக பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கிறது. இந்த காலகட்டத்தில் கோச்சாரமும் வலுவாக உள்ளது. அதனால் இந்த ஆண்டே தகுதிக்கு ஏற்ற உத்தியோகம் மறுபடியும் அமைந்துவிடும். உங்கள் மகனுக்கு கடக லக்னம், மேஷ ராசி. அவருக்கு தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கும் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கும், லக்னாதிபதியின் தசை நடக்கிறது. சந்திர மங்கல யோகம், புத ஆதித்ய யோகம், குருசந்திர யோகம், குரு மங்கல யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. லாபாதிபதியையும் குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. அதனால் படிப்பு முடிந்தவுடன் உடனடியாக நல்ல வேலை கிடைத்துவிடும். தந்தை ஸ்தானம் வலுவாக உள்ளதால் நீங்கள் சொந்த தொழில் செய்யலாம். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT