ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு வெள்ளி நகைத் தொழிலில் 12 ஆண்டுகள் அனுபவம் உண்டு. தற்போது தனியாகக் கடை வைத்து தொழில் செய்ய விரும்புகிறார். வங்கியில் கடன் வாங்கி கொடுக்கலாமா? தொழிலில் முன்னேற்றம் வருமா? கடன் விரைவில் அடையுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? ஆயுள் பலம் எப்படி உள்ளது?- மாணிக்கம், அம்மாபேட்டை

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். லக்னத்தில் தனாதிபதி களத்திராதிபதி, தைரியாதிபதியாகிய சூரியன், சனி, புத பகவான்கள் இணைந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதியாகிய குருபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் லாபாதிபதியான சுக்கிரபகவானையும் சுக ஸ்தானத்தையும் ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி லாப ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்து இருக்கிறார். தற்சமயம் கேதுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவர் செய்து வரும் தொழில் அவருக்கு ஓரளவு நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்றாலும் சொந்தமாகத் தொழில் செய்வது அவருக்கு ஏற்றத்தல்ல. பூர்வீகச் சொத்தை அடமானம் வைத்து தொழில் செய்தால் அது கைவிட்டுப் போய்விடும். பித்ரு தோஷமும் உள்ளதால் வேலைக்குச் செல்வதே சிறப்பாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும். வருடமொருமுறை குலதெய்வ வழிபாட்டையும் தவறாமல் செய்து வரச் சொல்லவும். மற்றபடி உங்கள் இருவருக்கும் தீர்க்காயுள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT