ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? தனியார் மருத்துவமனையில் விரிவுரையாளராகப் பணி செய்கிறார். தோஷம் ஏதும் உள்ளதா? - வாசகர், கடலூர்

DIN

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னாதிபதி களத்திர ஸ்தானாதிபதியுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் குடும்ப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுக, பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணமும் கைகூடும். அந்நிய உறவில் வரன் தெற்கு, தென்மேற்கு திசையிலிருந்து அமைவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும். மற்றபடி எதிர்காலம், குடும்ப வாழ்க்கை, புத்திர பாக்கியம் சீராகவே அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT