ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? எந்த துறையில் வேலை அமையும்? அரசு உத்தியோகம் உண்டா? சொந்த வீடு எப்போது அமையும்? - வாசகர், மயிலாடுதுறை

DIN

உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம் என்று வருகிறது, தனுசு லக்னம் அல்ல. மற்றபடி கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் குடும்பாதிபதி நீச்சபங்க ராஜயோகத்திலும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பாகும். தொழில் ஸ்தானாதிபதி லாபாதிபதியுடன் லக்னத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் சுக்கிரமகா தசையில் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டே ஆர்டர் கிடைத்து வேலைக்குச் சென்று வருவார். புதஆதித்ய யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளதால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT