ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது மழலை பாக்கியம் கிடைக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகர், காஞ்சிபுரம்

DIN

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, லக்னாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் இணைந்து, லாப ஸ்தானத்திலுள்ள சுகாதிபதி மற்றும் ராகுபகவான்களால் பார்க்கப்படுகிறார்கள். பாக்கியாதிபதியான குருபகவான் புத்திரகாரகராகி களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் லாப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, ராகு பகவான்களையும் பார்வை செய்கிறார். உங்கள் மருமகனுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. உங்கள் மகளுக்கு தற்சமயம் கர்மாதிபதியின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மருமகனுக்கு குருபகவானின் தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. அவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் குழந்தை பிறக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT