ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு வரன் பார்த்து வருகிறேன். எம்மாதிரி வரன் அமையும்? சர்ப்ப தோஷம் உள்ளது. எந்த கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த திசையில் வரன் அமையும்? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகளுக்கு கடக லக்னம், மீன ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் பாக்கியாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. தனாதிபதியும் பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியும் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் களத்திர, மாங்கல்ய ஸ்தானாதிபதியான சனிபகவான் மாங்கல்ய ஸ்தானத்தில் களத்திர காரகருடன் இணைந்து ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. நவாம்சத்திலும் குரு, சுக்கிர, சூரிய பகவான்கள் உச்சம் பெற்றிருக்கிறார்கள். ராகுபகவான் மூன்றாம் வீட்டிலும் கேதுபகவான் ஒன்பதாம் வீட்டிலும் அமர்ந்திருப்பதை சர்ப்ப தோஷம் என்று கூற முடியாது. அவருக்கு தற்சமயம் சுக்கிர மகாதசை நடக்கத் தொடங்கி ஓராண்டு ஆகிறது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT