ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா? பரிகாரமும் செய்துள்ளோம். வேறு பரிகாரம் செய்யவேண்டுமா? எந்த ஜாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்? - வாசகர், முசிறி

DIN

உங்கள் மகளுக்கு கடக லக்னம், ரோகிணி நட்சத்திரம். சந்திர தசையில் இருப்பு 0 வருடம், 10 மாதங்கள், 24 நாள்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். அதோடு பாக்கியாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து மாங்கல்ய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசையில் குடும்பாதிபதியான சூரியபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT