ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக இருமல், தும்மல், சளி மற்றும் பல நோய்களால் சிரமப்பட்டு வருகிறார். மேலும் மெலிந்துள்ளதோடு மறதியும் சோம்பலும் இருக்கிறது. ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுகிறார். இப்படி பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. எப்போது உடல் ஆரோக்கியம் பெறுவார்? - வாசகர், கொரட்டூர்

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னாதிபதியே ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். வியாதிக்கு ஆறாமதிபதியே காரணமாகிறார். லக்னமாகிய உயிர் ஸ்தானத்திற்கும் அதிபதியான கிரகம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. வியாதியாலும் பெரியதாக அவதிப்படமாட்டார். தன, பூர்வபுண்ணியாதிபதி தன ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சமும் பெற்றிருக்கிறார். குருபகவானின் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், எட்டாம் வீட்டின் மீதும், பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் அவரின் ஜாதகம் சராசரிக்கும் கூடுதலான பலம் பெற்றிருக்கிறது என்று கூற முடிகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கும். அந்த காலகட்டத்தில் தற்சமயம் உள்ள உடலுபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT