ஜோதிட கேள்வி பதில்கள்

பி.இ., படித்துள்ள என் மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், சென்னை

DIN

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் உச்சம் பெற்று அயனம், குடும்பம் மற்றும் சுக ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். குருபகவானுடன் பாக்கியாதிபதியான சூரியபகவான் இருப்பதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. கஜகேசரி யோகம், ருசக யோக ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவரே தொழில் ஸ்தானாதிபதியுமாகிறார். இதனால் திருமணம் வேலை இரண்டும் சிறப்பாக அமையும். தற்சமயம் குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் ஓராண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைத்துவிடும், மணவாழ்க்கை புத்திரபாக்கியம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT