சனி பகவானை வழிபடவும்
நான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். ஆனால் இன்னும் சொந்த வீடு அமைய வில்லை. என் நட்சத்திரம் மிருகசீரிஷமா ரோகிணியா? இதேபோல் என் மனைவியின் நட்சத்திரம் திருவோணமா அவிட்டமா?
நான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். ஆனால் இன்னும் சொந்த வீடு அமைய வில்லை. என் நட்சத்திரம் மிருகசீரிஷமா ரோகிணியா? இதேபோல் என் மனைவியின் நட்சத்திரம் திருவோணமா அவிட்டமா? என்பதைக் கூறவும். எங்கள் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
-வாசகர், பண்ருட்டி.
உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம் (ரோகிணி அல்ல). லக்னம் மற்றும் எட்டாமதிபதியான செவ்வாய் பகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்றுள்ள மூன்றாமதிபதி புதன், கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். சுகாதிபதி உச்சம் பெற்று பூர்வ புண்ணியாதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார். சுக ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி குரு பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் வீட்டுக்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டுக்கும் அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றமர்ந்திருக்கிறார். தற்சமயம் புத மஹா தசையில் சுக்கிர பகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நடக்கிறது. உங்கள் மனைவிக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம் (அவிட்டம் அல்ல). லக்னாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி மற்றும் லாபாதிபதிகள் லக்னத்தில் இணைந்திருப்பது சிறப்பு. இவர்களை பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலிருந்து குரு பகவான் ஒன்பதாம் பார்வையாகப் பார்வை செய்கிறார். தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சனி பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடப்பதால் இந்த காலக் கட்டத்திற்குள் சொந்த வீடு அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.