ஜோதிட கேள்வி பதில்கள்

தென்கிழக்கு திசையில் பெண்

DIN


எங்கள் அக்கா பையனின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். அவருக்கு எப்பொழுது திருமணமாகும்? எந்தத் திசையில் இருந்து பெண் அமையும்? சொந்தமா அல்லது அந்நியமா?

வாசகர், திருப்பூர்.

உங்கள் சகோதரி மகனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி புத பகவான், பூர்வ புண்ணியாதிபதி அயன ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான், ஆறாம் வீடு, லாப ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் ஆகியோர் லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. 
களத்திர நட்பு ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் (குரு சந்திர யோகம்) பார்வை செய்கிறார். 
குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து குடும்பாதிபதியைப் பார்வை செய்வதும் சிறப்பாகும். 
தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் கேது பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த பெண், தூரத்து உறவில், தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT