ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு திருமணமாகும் யோகம் உள்ளதா? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் கைகூடும்?  - வாசகர், சேலம்

DIN

உங்களுக்கு மகர லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியுமான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்து, சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவானையும் ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவானையும் சுக, லாப ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானையும் பார்வை செய்கிறார். இதன் மூலம் மூன்று திரிகோணாதிபதிகளின் இணைவு உண்டாகிறது. சச மகா யோகம், மகாவிஷ்ணு மகாலட்சுமி யோகம், ருசக யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானையும் (சிவராஜயோகம்) பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தையும் களத்திர நட்பு ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ஆறாம் வீட்டில் அஷ்டலட்சுமி யோகம் பெற்று அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். வேறு பரிகாரம் எதுவும் வேண்டாம். இதுவரை நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT