ஜோதிட கேள்வி பதில்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். பொறியியல் பட்டதாரியான என் மகன் மேற்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். என் மகள் சி.ஏ., படிக்கிறார். அவர்களின் எதிர்காலம், வாழ்க்கை எப்படி அமையும்? அவர்கள் இருவருக்கும் ஜாதகம் எழுதவில்லை. என் கணவர் சுய தொழிலாக (சமையல்) செய்து வந்தார். அதைத் தொடரலாமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகி, பெருங்களத்தூர்

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் குருசந்திர பகவான்களையும் பார்வை செய்கிறார். இதனால் சந்திர மங்கள யோகம், குருமங்கள யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. செவ்வாய்பகவானின் பார்வை சனிபகவானின் மீதும் படிகிறது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்னத்தில் பாக்கியாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்து குருசந்திர யோகத்தைப் பெற்று, பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, சுக்கிரபகவான்களையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்சிறார். சிவராஜ யோகம், புதஆதித்ய யோகம், பௌர்ணமி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. இந்த ஆண்டே அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வேலை அமையும். படிப்படியாக முன்னேறி நல்ல இடத்தை எட்டி விடுவார். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும்.
 உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து ருசக யோகத்தைப் பெறுகிறார். குருபகவான் தைரிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்று பாக்கியாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறார். புத ஆதித்யர்கள் லாப ஸ்தானத்தில் இணைந்து குருபகவானின் பார்வையை பெறுகிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதால் ஆடிட்டர் படிப்பை இன்னும் மூன்றாண்டுகளுக்குள் சிறப்பாக முடித்து விடுவார். நீங்கள் உங்கள் கணவர் செய்து வந்த தொழிலை ஏற்று நடத்தலாம். உங்கள் மகன் மகள் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT