முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

ஆசிரியர் பணி கிடைக்கும்

நான் என் கணவருடன் எப்பொழுது சேர்ந்து வாழ்வேன். எனக்கு அரசு ஆசிரியப்பணி எப்பொழுது கிடைக்கும்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:


நான் என் கணவருடன் எப்பொழுது சேர்ந்து வாழ்வேன். எனக்கு அரசு ஆசிரியப்பணி எப்பொழுது கிடைக்கும்?

வாசகி, திருவாரூர் மாவட்டம்.

உங்களுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் நீச்சம் பெற்றிருக்கிறார். இந்த மீன ராசிக்கு அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் மூலத் திரிகோண வீட்டில் அமர்ந்திருப்பதால் புத பகவானுக்கு  (நீசனேறிய ராசிநாதன் ஆட்சி உச்சம் பெறுகையில்) நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கிறது. 

அவருடன் அயன ஸ்தானதிபதியான சூரிய பகவானும் இணைந்து புத ஆதித்ய யோகத்தைத் தருகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று, தைரிய, அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானுடனும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானுடனும் இணைந்திருக்கிறார்.

பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி பூர்வ புண்ணியாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. லாபாதிபதியான சந்திரபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். 

லாபாதிபதி  தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது ஒரு தன யோகமாகும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டை ஏழாம் பார்வையாவும், ஒன்பதாம் பார்வையாக அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் கேது பகவான் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டிலும் அமர்ந்திருப்பது சிறப்பாகும். 

தற்சமயம் சனி பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கிறது. இது இன்னும் மூன்றாண்டுகள் நடக்கும். இந்த காலக் கட்டத்திற்குள் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து விடுவீர்கள். அரசு ஆசிரியர் பணியும் கிடைத்துவிடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →