ஜோதிட கேள்வி பதில்கள்

அன்னியத்தில் வரன் அமையும்

DIN


என் மகள் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். எப்பொழுது திருமண முயற்சிகள் மேற்கொள்ளலாம். மண வாழ்க்கை, எதிர்காலம் எவ்வாறு அமையும்?

வாசகர், திருச்சி.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடகராசி, பூனர்பூச நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கதிபதியான புதபகவான் அயனஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுகிறது.

பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயனஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெறுகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று, வர்கோத்தமத்தில் அமர்ந்து ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகத்தைக் கொடுத்து சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.  

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பர்வையாக தொழில் ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும் ஏழாம் பார்வையாக அயனஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும், அங்கமர்த்திருக்கும் புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் அங்கமர்த்திருக்கும் சந்திர பகவானையும் ( குருச்சந்திர யோகம்) செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) பார்வை செய்கிறார். 

தைரியஸ்தானமான சூரிய பகவான் உச்சம் பெற்று கேது பகவானுடன் லாபஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். தற்சமயம் புத பகவானின்  தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சம தோஷமுள்ள வரன் அன்னியத்தில் அமைந்து திருமணம் கை கூடும். 

பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT