மணவாழ்க்கை சிறப்பாக அமையும்
வங்கியில் பணி புரியும் என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? பணியிட மாற்றம் எப்பொழுது நடைபெறும்?
வங்கியில் பணி புரியும் என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? பணியிட மாற்றம் எப்பொழுது நடைபெறும்?
வாசகர், சூளைமேடு.
உங்கள் மகனுக்கு மகர லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா யோகத்தைக் கொடுக்கிறார். தர்மகர்மாதிபதிகள் உச்சம்பெற்ற அஷ்டமாதிபதியான சூரிய பகவானுடன் சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அதோடு குரு பகவானின் ஒன்பதாம் பார்வையும் இவர்களுக்குக் கிடைக்கிறது. லாபாதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சந்திரபகவானைப் (சந்திர மங்கள யோகம்) பார்வை செய்கிறார். தற்சமயம் தசையை நடத்தும் ராகு பகவான் குரு பகவானின் பார்வையில் இருப்பதும் சிறப்பாகும். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த ஆண்டே பணியிட மாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.