ஜோதிட கேள்வி பதில்கள்

அரசு வேலை உண்டு

DIN

எனக்கு எப்போது வேலை நிரந்தரமாகும்? திருமணம் எப்போது கைகூடும்? சிரமங்கள் எப்போது தீரும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

- வாசகர், திருவாரூர்

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதியான சூரியபகவான் அயன ஸ்தானத்தில் தன லாபாதிபதியான புதபகவானுடன் இணைந்து புதாதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து இருக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். 

ருணம் ரோகம் சத்ரு ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியுமான சனிபகவான் சுக ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று கேதுபகவானுடன் இணைந்து இருக்கிறார். தற்சமயம் லக்னாதிபதியான சூரிய மகா தசையில் முற்பகுதி நடக்கிறது. 

இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலை கிடைக்கும். திருமணமும் கைகூடும். தொடர்வதும் யோக தசையாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT