ஜோதிட கேள்வி பதில்கள்

தடைகள் நீங்கும்!

DIN


எனக்கு தற்சமயம் அனைத்து முயற்சிகளும் தடைப்பட்டு வருகிறது. சிறிய கடை வைக்க எடுக்கும் முயற்சிகள் எப்பொழுது வெற்றி பெறும்? உடல் ஆரோக்கியத்திலும் குறைபாடு உள்ளது; எப்பொழுது சரியாகும்? என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? 

-விஜயலட்சுமி, ஆவடி.

உங்களுக்கு கன்னி லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் சுப கிரகமாகி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் வர்கோத்தமத்தில், விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் அயன ஸ்தானாதிபதியான சூரிய பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று நீச்சமடைந்த சுக, களத்திர ஸ்தானாதிபதியான குரு பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம்பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று லாபாதிபதியான சந்திர பகவானுடன் இணைந்திருக்கிறார். 

தைரிய, அஷ்டமாதிபதியான செவ்வாய்ர பகவான் தொழில் ஸ்தானத்திலேயே திக் பலம் பெற்றமர்ந்திருக்கிறார். 

ஆறாமதிபதி ஆட்சி பெற்றிருப்பதால் உடல் ஆரோக்யம் பெரிதாக பாதிக்கப்படாது. அப்படியே உபாதைகள் ஏற்பட்டாலும் அது விரைவில் குணமடைந்து விடும். தற்சமயம் அயன ஸ்தானாதிபதியான சூரிய பகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இது சிறு குறைதான். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நன்மையான மாற்றங்கள் உண்டாகும். அந்த காலகட்டத்தில் தடைகள் நீங்கி, நீங்கள் கடை வைக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அடுத்த ஆண்டு உங்கள் மகளுக்குத் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT