எனக்கு 67 வயதாகிறது. பட்டய கணக்காளருக்கு படித்துவிட்டு மிகப்பெரிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன்.
எனக்கு 67 வயதாகிறது. பட்டய கணக்காளருக்கு படித்துவிட்டு மிகப்பெரிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன்.
எனக்கு 67 வயதாகிறது. பட்டய கணக்காளருக்கு படித்துவிட்டு மிகப்பெரிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். தற்சமயம் ஒரு கம்பெனியின் இயக்குநர்களில் சுயாதீன இயக்குநராக பணிபுரிய என்னை அழைக்கிறார்கள். என் ஜாதகப்படி இதனால் எனக்கு ஏதாவது அவமானம், அபவாதம், பண விரயம் ஏற்படுமா..?
- வாசகர், குண்டூர்.
உங்களுக்கு துலாம் லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம். லக்னம், ஆயுள், பொக்கிஷ, அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார்.
Advertisement
லக்னாதிபதியும், சுக பூர்வ புண்ணியாதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். சனி பகவானின் பத்தாம் பார்வை சுக்கிர பகவானின் மீது படிகிறது.
சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் அஷ்டமாதிபத்ய தோஷம் உண்டாகாது. மாறாக, தீர்க்காயுள் உண்டாகும் என்பது அனுபவ உண்மை. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் (பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது), நீச்சபங்க ராஜயோகம் (நீச்சனேறிய ராசிநாதன், குருபகவான் உச்சம் பெற்றிருப்பதால் உண்டாவது) பெற்று, சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று, பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான ஹம்ஸ யோகத்தையும் பெற்று, புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் (தன காரகர் தன ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு), ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானின் மீதும், புத பகவானின் மீதும் படிகிறது.
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார்.
கேது பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
பொதுவாக தொழில் ஸ்தானமும், தொழில் ஸ்தானாதிபதியும் சிறப்பாக இருந்தால் உயர் பதவி யோகங்கள் உண்டாகும். உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் உச்ச குரு பகவானும், ராகு பகவானும் இணைந்திருக்கிறார்கள்.
தொழில் ஸ்தானாதிபதி சந்திர பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்திலுள்ள நட்பு ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார்.
இதனால் சிறப்பான சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. "பத்தில் ஒரு பாவி' என்பது வழக்கு மொழி. தற்சமயம் சுக பஞ்சமாதிபதியான சனி பகவானின் தசை நடக்கிறது. துலாம் லக்னத்திற்கு சனி பகவான் ராஜ யோக காரகராவார். அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், திரிகோண வீட்டிற்கும் அதிபதியாகிறார்.
இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுக்கு யோக காரகர் என்ற பெயர் உண்டானாலும் முதல் வீடு கேந்திர வீடாக அமைந்து (அசுப கிரகங்களுக்கு கேந்திர வீடு பலம் வாய்ந்தது), இரண்டாம் வீடு திரிகோண வீடாக அமைவது துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானால் கிடைக்கும் அமைப்பாகும்.
சனி பகவான் வலுத்தவர்களுக்கு பல வழிகளில் (இரண்டுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து) வருமானம் வரும் என்பது அனுபவ உண்மை.
உங்களுக்கு சனி மஹா தசை நடக்கத் தொடங்கி 22 மாதங்கள் ஆகின்றன. தசா சந்தி காலமும் (18 மாதங்கள்) முடிந்து விட்டது. ஏழரை சனி மூன்றாம் சுற்று முடியும் தறுவாயில் இருப்பதால் சுயாதீன இயக்குநர் பதவியை தைரியமாக ஏற்றுக் கொள்ளலாம். எந்த நஷ்டமும் உண்டாகாது. பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.