ஜோதிட கேள்வி பதில்கள்

என் மருமகன் தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கிறார். குழந்தை பாக்கியமும் தள்ளிப் போகிறது. எதிர்காலம் எவ்வாறு அமையும்..? 

DIN

என் மருமகன் தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கிறார். குழந்தை பாக்கியமும் தள்ளிப் போகிறது. எதிர்காலம் எவ்வாறு அமையும்..? 

-வாசகர், திருச்சி.

உங்கள் மருமகனுக்கு கும்ப லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம், அயன ஸ்தானாதிபதி சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சுக பாக்கியாதிபதியான சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். 
புத்திர ஸ்தானம் பலம் பெற்றிருப்பதால் குழந்தை பாக்கியம் சிறப்பாக அமையும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானத்திற்குமதிபதியான குரு பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானையும் பார்வை செய்கிறார். 
தைரிய தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் லக்னத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான சுக்கிர பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கிறது. 
இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவருக்கு மறுபடியும் நல்ல வேலை கிடைக்கும். படிப்படியாக முன்னேறி நல்ல நிலையை எட்டி விடுவார். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு. பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT