திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் "யோனி பொருத்தம்". இது தான் கணவன் - மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா? இல்லையா? என்பதைக் கூறும் பொருத்தம் ஆகும்.
யோனி பொருத்தம் என்பது தம்பதிகள் மத்தியில் தாம்பத்திய வாழ்க்கை குறித்துக் கூறும் பொருத்தம் ஆகும். கணவன் - மனைவி வாழ்வில் இல்வாழ்க்கை இன்பம், மகிழ்ச்சி போன்றவற்றை இது குறிக்கிறது. இந்த காலத்தில், யோனி பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பது, தம்பதியரிடையே அதிகரிக்கும், விவாகரத்திற்குப் பிறகு தான் தெரிய வருகிறது மக்களுக்கு.
மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு வகையான விலங்குகளின் பாலியல் உணர்வை அடிப்படையாக வைத்து பொருத்திக் கூறுகிறார்கள்.
இருவர் மத்தியில் யோனி பொருத்தம் இல்லை எனில், அவர்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்காது. கணவன் - மனைவி உறவில் வேட்கை / ஆசை குறைவாக இருக்கும் என்றும், குழந்தைப் பாக்கியத்தில் சிரமம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு ...
பின்வரும் விலங்குகளின் தனித்தன்மை கொண்டு ஒருவர் தாம்பத்தியத்தில் மட்டும் அல்லாது மற்றைய சுய ஒழுக்கம், தன்மைகளையும் இது தெளிவுபடுத்துவதாய் இருக்கும்.
எருமை / காளை / எருது :- வலிமை, பொறுமை, மீறும் தன்மை ...
பூனை / முயல் : - தூய்மை, நுணுக்கம், தனிமை, அலட்சியம், பயம், ஆறுதல் ...
மாடு / ஒட்டகம் :- பயன்பாடு , மீறுதல் ...
நாய் / ஓநாய் : - விசுவாசம், நட்பு, வளைந்து, பிடிப்பது...
யானை :- புரிதல், அசையாமை...
குதிரை :- சக்தி, பீதி ...
சிங்கம் : - பெருமை, தலைமைத்துவம், மரியாதை ...
குரங்கு :- விளையாட்டுத்தனம், தீவிரத்தன்மை
இல்லாமை...
கீரிப்பிள்ளை :- வீரியம், வேகம்...
எலி :- தந்திரம் அல்லது துரோகம் ...
செம்மறி ஆடு :- மென்மை, பின்வாங்குதல், வெறுமை ...
பாம்பு :- உருமாற்றம், உறக்கநிலை, ரகசியம் ...
புலி :- ஆக்கிரமிப்பு, இரக்கமற்ற தன்மை ...
விலங்குகள் அவற்றின் குணாதிசயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. விலங்குகளின் அடையாளங்கள் மனிதனின் உள்ளுணர்வு தன்மையைக் குறிக்கிறது.
நீங்கள் பாலியல் மகிழ்ச்சியைத் தேடுகிறீர்களானால், ஜோதிட அமைப்புகள் உங்களின் துணையை விலங்குகளின் குணாதிசங்களை அறிந்து அதன் அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்துகின்றன.
விலங்கு ராஜ்ஜியத்தில் விலங்குகள் ஆபத்தானவை, நல்ல பாலியல் இணக்கம் இருக்காது. நினைவில் கொள்வதும் முக்கியம், பாலியல் உணர்வு இணக்கத்தன்மை என்பது உறவுகளின் பிற பகுதிகளிலும்
நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை.
பாலியல் உணர்வு இணக்கத்தன்மை தவிர சில விலங்குகளை அதன் இயற்கையிலேயே உள்ள பகைமை தன்மையைப் பொறுத்து அவற்றை இணைப்பதும் இல்லை. இதுபோல் இவற்றை விளக்குவது நல்லது.
கீரிப்பிள்ளைக்கு, சிறந்த பாலியல் துணை இல்லை.. அவர்களின் ஆன்மீகப் பயணம் தனியாக முடிக்கப்பட வேண்டும் என்பதை ஆன்மா உணரும் ஒரு புள்ளி இது. கீரிப்பிள்ளை எப்பொழுதும் தங்கள் பாலியல் மகிழ்ச்சியில் சமரசம் செய்துகொள்ள வேண்டும். தங்கள் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கூட்டாளிகள் இருக்கிறார்கள் ஆனால் முழுமையாகத் திருப்தி அடைய மாட்டார்கள்.
பின்வரும் ஜோடிகளின் பாலியல் உறவுகள் இணக்கமற்றவை என்று குறிப்பிடப்படுகின்றன.
பூனையும் X எலியும்
பசுவும் X புலியும்
பாம்பும் X கீரியும்
நாயும் X பூனையும், முயலும்
குரங்கும் X ஆடும்
புலியும் X கீரியும்
எருதும் X பூனையும்
யோனிப் பொருத்தம்
பாலுறவுக்கேற்ற அடையாளமாக இது கருதப்படுகிறது. இது சிறப்பாக இருப்பின், பொருளாதார செல்வாக்கு, சந்தோஷமான மணவாழ்க்கை உண்டாகும். இல்லையெனில், தம்பதியினரிடையே திருப்தி இல்லாமை,
குழந்தைகள் உறவில் பிரச்னை ஏற்பட ஏதுவாகும். இந்த யோனிப் பொருத்தம் இல்லாதபோது, ராசி அதிபதி பொருத்தம் / வசிய பொருத்தம் / மகேந்திர பொருத்தம் இவற்றுள் ஏதாவது இரண்டு பொருத்தம் இருப்பின்
பிரச்னை இல்லை. இந்த விதி விலக்கு எத்தனை பேர் அனுசரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
திருமண பொருத்தத்தில் நட்சத்திர பொருத்தமான 10 பொருத்தம் மட்டுமின்றி, கிரக பொருத்தமும் முக்கியமாவதை கவனிக்கத் தவறக்கூடாது. எனக்குத் தெரிந்து, ஒரு திருமண பொருத்தத்தில், ஆண், பெண் இருவருக்கும் மனுஷ கணம், பொருத்தம் என்று சேர்த்தாகி விட்டது. குறுகிய காலத்தில் விவாகரத்துக்கு இருவரும் வந்துவிட்டனர். ஆய்வு செய்து பார்த்ததில் அந்த இருவரில் ஒருவருக்கு செவ்வாய் + ராகு இணைவு இருந்தது. இது எப்படி சரியாகும். இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே.
தோஷ சாம்யம் / பாவ சாம்யம் என ஒரு ஜோதிட கணக்கு பார்த்ததில் நிறையத் தெரிய வந்தது. பெண்ணை விட ஆணுக்குத் தோஷ சாம்யம் அதிகமாக இருப்பது மட்டுமே சிறப்பு. இருவருக்கும் சமநிலையையும் சேர்த்து வைக்கலாம். பெண்ணுக்கு தோஷ சாம்யம் அதிகமாக இருந்தால் கூடவே கூடாது. அது நிச்சயம் பிரிவினையைத் தூண்டும் .
இந்த "தோஷ சாம்யம்" மூலம் எந்த காரணத்தால் இந்த தம்பதியர் பிரிந்தார்கள் / பிரிவார்கள் என அறுதியிட்டு சொல்ல முடியும். இந்த ஜோதிட ஆய்வை வட இந்தியாவில் உயர்ந்த சமூகத்தினரும், வசதி படைத்தவர்களும் பார்க்கின்றனர். இங்கு அதிகமாக இதனை காண்பவர்கள் அரிது எனச் சொல்லலாம். இது ஒரு கணிதம் என்றாலும் இதற்காக அங்கு அதிகம் கட்டணம் வசூலிக்கவே செய்வதையும் அறிய முடிகிறது.
காலம் மாறும் போதும், தேவைகள் அதிகரிக்கும் போதும் இதுபோன்ற துல்லிய கணித முறைகளைக் கடைப்பிடித்தே தீரவேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டியுள்ளது.
தொடர்புக்கு: 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.