சித்திரிப்புப் படம் 
ஜோதிட கட்டுரைகள்

சொந்தத் தொழிலா, அடிமைத் தொழிலா: ஜோதிடத்தில் அறிய முடியுமா?

ஜோதிடத்தின் மூலம் ஒருவருக்கு சொந்தத் தொழிலா, அடிமைத் தொழிலா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம் இக்கட்டுரையில்..

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

தடுத்து நிற்பதும், தாங்கி நிற்பதும் ஜோதிடம்.. தடுத்து நிறுத்திய பின்னரும் சரியான வழிமுறைகளை முறைப்படி பயன்படுத்தாமல் முன்னேறினால் ஓங்கி அடிப்பதற்கு வழியாகும் என முன்னரே அறிவிப்பதும் ஜோதிடம் என்றால் அது எவ்வளவு சாலச் சிறந்தது என அறியவும்.

பகுத்தறியும் அறிவை பெற்ற ஜீவராசிகளின் உயரிய இடத்தில் உள்ள மனிதர்களுக்காகவே பார்வதி - பரமசிவனால் அங்கீகரிக்கப்பட்ட உன்னத கலை "ஜோதிட கலை", இதை அனைவரும் அறிந்திருந்தால் மனித இனம் தழைத்தோங்குவதில் தங்கு தடையே இருக்காது.

ஒருவரின் தொழில் / வேலைக்கு அனைத்து கிரகங்களும் என்றாலும், தொழிலுக்கு ஆதாரமான கிரகங்களில் முக்கியமானது: சனி மற்றும் புதன்...

சூரியன் : செய் தொழிலில் கிடைக்கும் அந்தஸ்து / பெருமை / கெளரவம் இவற்றை அறியப் பயன்படும்.

சந்திரன் : செய் தொழிலை மனம் ஏற்குமா / அவ்வப்போது நிலை மாறுமா இவற்றை அறியப் பயன்படும்.

செவ்வாய் : செய் தொழிலில், தமக்கு உடல் வாகு / செயல் திறனை ஏற்கும் உடல் வலிமை அறியப் பயன்படும்.

புதன் : செய் தொழிலில் எந்த அளவு செயல் திறன் /அறிவு / முயற்சி இவற்றை அறியப் பயன்படும்.

குரு : செய் தொழிலில் மற்றவர் ஆலோசனை / இணக்கம் / அனுபவத்தை ஏற்குமா , அறியப் பயன்படும்.

சுக்கிரன் : செய் தொழிலில் பெரும் செல்வம் / வருமானம் / ஈர்ப்புத் தன்மை இவற்றை அறியப் பயன்படும்.

சனி : செய் தொழிலை செவ்வனே செய்ய உடலும் , மனமும் இணைவதை அறியப் பயன்படும்.

ஒருவரின், தொழில் மற்றும் வேலை பற்றிய சரியான கணிப்பை D -10 எனும் தசாம்சம் எனும் சக்கரம் மட்டும் தான் விவரிக்கும். D -1 எனும் ராசி சக்கரம் அதற்கான அறிவிப்பைத் தந்தால் மட்டுமே அதற்கடுத்த தசாம்ச சக்கரம் ஆய்வு செய்திடல் வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இதனை ஆய்வு செய்வதற்குரிய நபர்கள் குறைவு என்பதனை இங்குக் குறிப்பிடவே செய்யவேண்டியுள்ளது.

அப்படியே செய்தாலும் அவர்கள் கேட்கும் கட்டணமும் அதிகம் தான். காரணம், அதில் நிறைய வேலைகள் உள்ளது உண்மை தான். சரியான பிறப்பு குறிப்புடன் உள்ளவருக்கு முதலில் ஜாதகம் கணித்து, அதனைக் கொண்டு பிறகு தசாம்சம் போன்ற மற்றைய சக்கரங்களைத் தெரிவு செய்து ஜாதகர் கேட்கும், கேட்க தவறியதையும் எடுத்துரைக்க வேண்டிய நிலையில் தான் ஜோதிடர்கள் உள்ளனர் என்பதை முதலில் யாவரும் அறிதல் வேண்டும்.

பராசரர் கூற்று படி மூன்று நான்கு வழிகளில் ஜாதகத்தின் உண்மைகளை அறிந்து பின்னர் தான் ஜாதகருக்கு உரைத்திடல் வேண்டும். ஜோதிடத்தில் ஒன்று அஷ்டக வர்க்க முறை அதில் எல்லாமே 0 முதல் 8 வரையிலான எண்கள் / பரல்கள், மொத்தத்தில் 337 பரல்கள். இந்த உலகில் வாழும் அனைத்து மானிடருக்குமே இந்த 337 பரல்களுக்குள் அடக்கம். அது ஆண்டி முதல் அரசர் வரை.

லக்கினத்திற்கு 10ஆம் இடத்தில் 30 பரல்களுக்கு மேல் ஒருவரின் ஜாதகத்தில் இருப்பின் நிச்சயம் அவர் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும், வேண்டியபோது இடமாற்றமும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் இது 28 பரல்களுக்கு குறைவாக இருப்பின் நிச்சயம் அடிமை தொழில் தான்.

இந்த நிலை உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் ஒருவரின் கீழ் பணிபுரிய வேண்டிய நிலை தான். எவருடைய ஜாதகத்தில் அதிகபட்ச பரலை 10ஆம் இடம் பெற்றிருக்கிறது அவர் தனியாக தொழில் செய்யலாம். அவருக்கு தொழில் படிப்பு இல்லை என்றாலும் அவரை முதன்மைப்படுத்தி (பெயரை வைத்து) வீட்டில் உள்ள தொழில் படித்த வேறு ஒருவர் தொழில் தைரியமாக செய்யலாம்.

இப்போது தசாம்சம் எனும் ஒரு ஜோதிட சக்கரத்தைப் பற்றி காணலாம். ராசி சக்கரத்தில் லக்கினாதிபதி மற்றும் தசாம்ச சக்கர லக்கினாதிபதி ஆகிய இருவரும் நல்ல நிலையில் இருத்தல் அவசியம். அதாவது இந்த லக்கினாதிபதிகள் 6, 8, 12ல் இல்லாமலும், நீச்சம் அடையாமலும், அஸ்தங்கம் அடையாமலும், பகை ஸ்தானத்தில் இல்லாமலும், இயற்கை பாவிகளை விட லக்கின பாவிகள், பாதகாதிபதி , அஷ்டமாதிபதி போன்றவர்களின் இணைவு இல்லாமலும் இருத்தல் அவசியம்.

அடுத்து தொழில் / வேலைக்கு காரக கிரகமான சனி மற்றும் புதன் மேற்கூறியபடி இல்லாமல் இருத்தல் அவசியம். இதனை ராசி சக்கரம் மற்றும் தசாம்ச சக்கரத்திலும் காணுதல் அவசியம்.

மேற்கூறிய இரண்டு சக்கரத்திலும் லக்கினாதிபதி, சனி, புதன் இவர்கள் சர ராசியில் வலுவான நிலையில் இருந்தால், தொழில் / வேலை நிரந்தரமற்றதாக அமையும். அதாவது செய் தொழில் / வேலை மாற்றம் அடிக்கடி நிகழும். அதுவே ஸ்திர ராசி அமைப்பின் கீழ் இருந்தால், தொழில் /வேலை நிரந்தரமானதாக, நிலையானதாக அமையும். உபய ராசியில் அமையுமானால், ஜாதகரின் தொழில் / வேலை ஆரம்பத்தில் நிலையற்றதையும் தடுமாற்றத்தையும் தந்து படிப்படியாக நிலையானதாக மாறி அமையும்.

இன்னொரு ஜோதிட விதிப்படி ராசி சக்கரத்தின் லக்கினாதிபதி மற்றும் தசாம்ச சக்கரத்தின் லக்கினாதிபதியும் நெருப்பு ராசியில் இருந்தால், நிலையான வேலையையும், நில ராசியானால் வியாபார தொழிலையும், காற்று ராசியானால், வியாபாரம் மற்றும் வேலையிலும், நீர் ராசியானால் ஒரே ஒரு வியாபாரத்திலும் இருப்பர்.

அதே போல் ஜாதகர் செய் தொழில் / வேலையைத் தொடர்வாரா, நண்பருடன் தொழில் செய்வாரா, சுய தொழில் செய்யவாரா, கூட்டுத் தொழில் செய்வாரா, அடிமை தொழில் செய்வாரா எனவும் இந்த தசாம்சம் மூலம் அறியமுடியும். அதேபோல் ஒருவரின் ஜாதகத்தில் 6ஆம் அதிபதியாக சூரியன் இருந்து அவர் (சூரியன்) 10ல் இருப்பின் தந்தையின் பணியை ஜாதகர் செய்ய வேண்டி வரும்.

இதுபோன்ற பல தகவல்களை இந்த ஜோதிடம் மூலம், தசாம்ச சக்கரம் மூலம் அறிய முடியும். இதில் கூறப்பட்டவை ஒரு சிலவே, தகுந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி நடந்தால், வாழ்வில் சிரமங்கள் குறையும், இன்பம் கூடும். தற்காலிகமான வேலை வாய்ப்புகள் கோச்சார கிரக நிலைகளாலும், நிலையான வேலைகள் தசா புத்திகளாலும் ஏற்பட வாய்ப்பு.

ஒருவரின் ஜாதகத்தில் தசாம்ச சக்கரத்தில் 10ஆம் அதிபதி புதன் ஆனால், அந்த ஜாதகர் மிகுந்த புத்திசாலியாக இருப்பார் எனக் கூறுவர். அதேசமயம் அந்த தசாம்ச சக்கரத்தில் புதன் பகை வீட்டில் இருப்பின் அவரின் புத்திசாலித்தனம் மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே செல்லுபடியாகும் என்பதை அறிய வேண்டும். சிலர் கணினி மூலமாக ஜாதகம் குறைந்த கட்டணத்தில் பார்க்கிறார்கள். அது முதலில் சொன்னதை போன்று 10ஆம் அதிபதியின் பலனை மட்டும் தான் கூறமுடியும். அந்த அதிபதி நின்ற இட பலனையோ அல்லது பார்க்கும் கிரகம், இணைந்த கிரகம் பலனைக் கூறுவதில்லை. அதனால், கணினி கூறுபவை நூற்றுக்கு நூறு சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு சிலர் ஜோதிடர் ஆலோசனைப்படிதான் நடந்தேன், அப்படியும் தொழிலில் சிரமம், வேலையில் பிரச்னை என்பதை கேட்கவே சிறிது கஷ்டமாக இருந்தாலும் அவரின் சில கர்மாவால் அது அப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால், அவர்களின் கர்மாவை அறிந்து, தக்க "கர்ம பரிகாரம்" செய்தால், தொழிலில் நஷ்டம், வேலையில் பிரச்சினை மற்றும் அவர்கள் குடும்பத்திலும் இதுபோன்ற கர்மாவை குறிக்கும் கிரக அமைப்பு அவர்களின் சந்ததிக்கு வரவிடாமல் தவிர்க்கலாம்.

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT