ஜோதிடம் 
ஜோதிட கட்டுரைகள்

லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும் பலன்களும்!

8 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களின் பாதிப்பும், அதன் பலன்களும்..

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

லக்னத்துக்கு 8 ஆம் இடமும் அதனுடன் சம்பந்தப்பட்ட கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் பற்றியும் எளிதாகப் பலன் அறியலாம்.

8 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும், பலன்களும்!

லக்கினத்திற்கு 8 ஆம் இடம்

லக்கினத்திற்கு 8 ஆம் இடம் ஒருவரின் ஆயுளைக் குறிப்பதால் இது ஆயுள் ஸ்தானம் எனப்படும். ஒருவரின் ஆயுள், நீண்ட ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், உழைக்காமல் கிடைக்கும் பணம், மறைந்திருக்கும் சக்தி, வெளிநாட்டு வாழ்வு மற்றும் மரணம் போன்ற பலன்களைக் குறிக்கும் இடம் என்பதால் இந்த இடத்தில் இருக்கும் கிரகத்தைப் பொறுத்து பலன்கள் சாதகமாகவும், பாதகமாகவும் அமையலாம்.

திடீர் மாற்றங்கள் மற்றும் மறைந்திருக்கும் விஷயங்கள்

இந்த இடம் திடீர் அதிர்ஷ்டங்கள் அல்லது எதிர்பாராத நிகழ்வுகளைக் குறிக்கும்.

மறைந்திருக்கும் சக்தி, உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கள் போன்ற விஷயங்களையும் 8 ஆம் இடம் குறிக்கிறது.

உடல் உறுப்புகள்

வெளி பிறப்பு உறுப்புகள், குதம், பெரிய குடல் போன்ற உடல் பாகங்களையும் இந்த ஸ்தானம் குறிக்கும்.

ஜோதிடத்தில், அஷ்டவர்கம் வழி சொல்வதானால் லக்கினத்தில் அதிக பரல்களையும் 8 ஆம் இடத்தில் குறைந்த பரல்களையும் பெற்றிருக்கும் ஜாதகரின் ஆயுள் அதிகம் என தீர்மானிக்கலாம். அதே சமயம் 8 ஆம் இடத்தில் லக்கினத்தை விட அதிக பரல்கள் பெற்றிருந்தால் ஆயுள் குறைவு எனலாம். இதனை கிரக ரீதியாக தீர்மானித்தல் நல்லது.

நிச்சயம் இங்கு அளிக்கப்பட்ட பலன்கள் 50 முதல் 80 சதவீதம் சரியாக இருக்கும். வேறு கிரக பார்வை மற்றும் ஒருவரின் ஜாதக ரீதியாக சுபர் / அசுபர் தொடர்பை பொருத்து பலன்கள் மாறுபட வாய்ப்பு.

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

திருப்தியின்மை

சுய மரியாதை பாதிக்கப்படுதல்

வாரிசு வேலை / குலத்தொழில் அமையும்

முதலீட்டு தொழில் கூடாது

கூட்டுத் தொழில் செய்தால், ஜாதகர் கூட்டாளியால் ஏமாற்றப்படுவார்

குலதெய்வம் குழப்பம் உள்ளவர்கள்

ஆபரணம் தொலைத்தவர்கள் இவர்கள்

சீட்டு, ஷேர் மூலம் நஷ்டம் இருக்கும்

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

அதிக ஞாபகமறதி இருக்கும்

அவமானங்கள் ஏற்பட வாய்ப்பு

கள்ள தொடர்பால் பெயர் கெட வாய்ப்பு

காதலும் உண்டு அதில் முறிவும் உண்டு

நீர் கண்டத்தில் தப்பியவர்கள்

தாயாருக்கு வயிற்று பிரச்னையால் அறுவைச் சிகிச்சை ஏற்படும்

இவர்கள் கடன் வாங்கக்கூடாது வாங்கினால் கடன் அடையாது

இளைய சகோதரரர் உயிர் கண்டம் தப்பியவர்களாக இருப்பர்

இரவு பணி இருக்க வாய்ப்பு

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்

உணர்ச்சி வசப்படுதல்

சந்தேக குணம் உண்டு

ஜாதகர் வருமானத்தில் ஒரு ரகசியம் இருக்கும், முழு வருமானத்தையும் கூறமாட்டார்கள்

பல் பிரச்னை இருக்கும்

ஆரம்பக் கல்வி தடை இருக்கும்

இரு பட்டம் வாங்குவார்கள்

தாயாருக்கு முதல் குழந்தை பற்றிய கவலை இருக்கும்

பெரும்பாலும் மாமனார் இல்லாத வீடு அமையும்

குடும்பத்தில் திருமணம் ஆகாதவர் இருக்க வாய்ப்பு

மருத்துவமனையில் சிகிச்சைபெறும்போது உதவிக்கு ஆள்கள் இருக்கமாட்டார்கள்

களத்திர துரோகம் செய்பவராய் இருக்கக்கூடும்

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

கோழைத் தனம் இருக்கும்

பகுத்தறியும் தன்மையின்மை

மரண பயம் இருக்கும்

சிறுவயதில் தாமதமான பேச்சு இருக்கும்

ENT பிரச்னை இருக்கும்

ஜாதகர் ஒரு கண்டம் தப்பியவர்

13 வயதில் நீர் கண்டம் உண்டு

தந்தைக்கு இரு தார யோகமுண்டு

கட்டாயம் ஏமாற்றம் ஒன்றை சந்திப்பவர்கள்

ஒரு சிலருக்கு விருப்ப திருமணம் உண்டு

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்

நல்லதைத் தெரியாத புத்தி

தைராய்டு போன்ற கொழுப்பு நோய்கள்

+2 க்குள் ஒரு தடை இருக்கும்

வெளியூர் கல்வி, ஹாஸ்டெல் கல்வி உண்டு

திருமணத்திற்குப் பின்னர் படிப்பார்கள்

அரசு பதவிக்கு வாய்ப்பு உண்டு

எப்போதும் பணம் பற்றிய சிந்தனை இருக்கும்

எந்த பொருளையும் ஒரே பிராண்டாக பயன்படுத்த மாட்டார்கள் அதனால் தோல் வியாதி உண்டு

இருமுறை ஏமாற்றம் சந்திப்பார்கள்

தந்தை அரசு பதவி நிர்வாக துறையில் இருப்பார்கள்

ஒரு சில தீய பழக்கங்கள் இருக்கும்

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

அலங்கார பிரியர்

படுக்கை சுகங்களை நேசித்தல்

கல்வியில் ஒரு பட்டம் பெறத் தடை இருக்கும்

14 வயதில் ஒரு மேடை ஏறிக் கலை நிகழ்ச்சி / விளையாட்டுப் போட்டி சம்பந்தமாகப் பரிசு வாங்குவார்

20 வயதில் காதல் ஏற்பட்டு 23 வயதில் முறிந்துவிடும்

பெண்களால் ஒரு இழப்பு அல்லது ஒரு அவச்சொல் இருக்கும்

அத்தையின் சுக வாழ்வு சரியில்லை

தாயாரால் ஜாதகருக்கு மனகஷ்டம் உண்டு

மனைவிக்குக் கருத்தரிப்பில் தடை இருக்கும்

கூட்டு தொழில் ஆகாது, கூட்டாளிகள் கூடாது

கல்லடைதல் போன்ற சிறுநீர் பிரச்னை இருக்கும்

முறைகேடான பாலியல் தொடர்பு, களத்திர துரோகம் செய்தல் இருக்கும்

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்

அறியாமையோடு இருத்தல்

ஜீவன தொழிலில் தீராத பிரச்னைகள்

பாவ காரியம் செய்ய துணிவு

எதையும் சோதித்து ஆராய்ந்து அறியும் தன்மை

குலத்தொழில் சிறப்பாக இருக்கும்

இளமையில் கசப்பான சம்பவம் நடந்து இருக்கும்

ஒரு விபத்தில் தப்பிய நபர்

காது பிரச்னை இருக்கும்

ஒரு சில தந்தையருக்கு இரு தாரம் இருக்கும்

இரு தார யோகம் அல்லது மறைமுக குடும்பம் உண்டு

வெளிநாட்டு வருமானம் உண்டு

மலச்சிக்கல் பிரச்சினை உண்டு

மண், மனை , பூமி, வாஸ்து, எண்கணிதம் , ஜோதிடம் போன்றவை வெற்றி தரும்

3 ஆவது தொழில் தான் வெற்றி தரும்

வாகனம் அமைய / முதல் குழந்தைக்குத் தாமதம் ஏற்படும்

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்

நம்பிக்கை துரோகம் செய்தல்

பெண்களை இழிவாக நடத்துதல்

இறை நம்பிக்கை தன்மை

தமது 18 ஆம் வயதிற்குள் மூன்று பள்ளிகள் மாறி இருப்பார்

ஜாதகரின் தந்தைக்கு நிலையான உத்தியோகம் இல்லை

குலதெய்வம் வழிபாட்டில் தடை உண்டு

தந்தை பூர்வீகம் இடம் மாறிய பிறகு வளர்ச்சி அடைவார்

பெண்களை இழிவாக நடத்துதல் / மாறுபட்ட பாலியல் புணர்வு

ரசாயன மருந்து பொருள்களை பாலியலுக்குப் பயன்படுத்துதல்

தாய் வழியில் சிறுவயதில் இறந்தவர்கள் உண்டு

கப்பல் துறை போன்றவை லாபம் தரும்

தந்தைக்கு வயிறு சார்ந்த (ஹிரண்யா ) அறுவைச் சிகிச்சை இருக்கும்

ஜாதகர் கையில் எப்போதும் பணம் இருக்கும்

  • லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்

ஆரம்பக் கல்வி தடை

எதிலும் பிடிப்பு இல்லாமை

எதிர்கால சிந்தனை இன்மை

போலி ஆன்மீகவாதி

தற்கொலை எண்ணம்

போலி ஆவணம் தயாரித்தல்

நிரந்தர குடியிருப்பு இல்லாமை

கல்வியில் ஒரு அரியர் வைத்து இருப்பார்

வாரிசு வேலை உள்ள குடும்பம்

படித்த களத்திரம் அமையும்

மேலதிகாரி / நிர்வாகியால் தொந்தரவு இருக்கும்

எப்போதும் தொழில் தடை இருக்கும்

திருமணம் தாமதம் அதுவும் அந்நிய சம்பந்தம் வரும்

நண்பரோடு சீட்டுப் போட்டு ஏமாறுவார்

கையெழுத்துப் போட்டு மாட்டிக் கொள்வார்கள்

தொடர்புக்கு : 98407 17857 / 91502 75369

The troubles caused by the 8th house and related planets can be easily resolved.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா், மணிப்பூா் சம்பவங்களை ஒன்றுபடுத்தக் கூடாது: கே.எஸ்.அழகிரி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மார்க் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

தருமபுரியில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு

SCROLL FOR NEXT