திருமணம் கோப்புப்படம்
ஜோதிட கட்டுரைகள்

திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஜாதகரின் குணம் மாறுவது ஏன்?

திருமண பொருத்தத்தின்போதே எவையெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி..

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

காதலிக்கும்போது பெண்ணோ/ ஆணோ அப்படி இல்லையே. திருமணத்திற்குப் பின்னர் அப்படியே குணம் மாறிப்போனது காரணம் என்ன? அதேபோல் நிச்சயித்து திருமணம் ஆன உடன் இருப்பதுபோல் திருமணம் ஆகி சில மாதம் கடந்து ஏன் இந்த மாற்றம் என நம்மில் பலர் கேட்டிருப்போம்.

ஆம், நட்சத்திர பொருத்தம் மட்டுமே கண்ட நாம் விளக்கமாகக் கேட்டறிவது இல்லை. காரணம் மற்றைய அனைத்தும் பார்க்கும் நாம் திருமண வாழ்வில் எப்படி இந்த தம்பதிகள் இருப்பார்கள் என யோசிக்க ஜாதகம் பார்ப்பவரிடம் கேட்டறிவது இல்லை. இந்த காலகட்டத்தில் அனைத்துமே அவசரம் மட்டுமே முன்னிற்கும். அவர்களின் வாழ்க்கை நீண்ட காலம் நன்றாக வாழ்வது அவசியம் என நினைப்பது மட்டுமே தவிர அதற்கான தேடுதலை பெரியவர்களும் சரி காதலித்து திருமணம் செய்யும் இளைய சமுதாயத்தினரோ சரி முக்கியத்துவம் தருவதில்லை. அதற்குள் அனைத்தும் முடிந்து வாழ்க்கையை முறித்துக்கொண்டு சில திங்களில் மனம் கசந்து விலகுவதைக் காண்கிறோம்.

இதனைத் திருமணத்திற்கு முன்னரே அறிந்து அது காதல் திருமணமானாலும் ஆண் மற்றும் பெண் இருவரும் ஒருவருக்கு ஒருவரின் எதிர்பார்ப்புகள் என்ன என்று அறிந்து பின்னர் திருமணப் பந்தத்தில் செல்லும்போது அது நீண்ட நாள்கள் வாழ வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எளிமையான தேடல் பல இருப்பினும் பின்வரும் ஒரு சிலவற்றை எளிதாக அறிந்து அதனை ஏற்கும் பக்குவம் பெற்று விட்டால் நிச்சயம் பிரிவினையை தவிர்க்கலாம். ஏன் ஒரு ஆண் அல்லது பெண் திருமணத்திற்குப் பின்னர் இப்படி மாறுகிறார் / மாறுவார் என அறிந்து கொண்டால் மற்றவர் அதற்கு தக்கப்படி மாற்றிக் கொள்வதில் ஒன்றும் பெரிய அவமானம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

ஒருவர் தமது ஜாதகத்தில், ராசி சக்கரத்தில் உள்ள 6 ஆம் அதிபதி அக்னி (நெருப்பு ) நவாம்சத்தில் அதாவது அம்சத்தில் மேஷம் / சிம்மம் / தனுசு ராசியில் இருந்தால், தங்கள் மனைவி / கணவர் மென்மையாகவும் அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஏனென்றால் ஜாதகர் (அவரோ/ அவளோ ) பிறவியிலேயே கோபம், அதிர்ச்சி, பிரச்னைகள் போன்ற குணத்துடன் இருப்பதால் தான்.

ஒருவர் தமது ஜாதகத்தில், ராசி சக்கரத்தில் உள்ள 6 ஆம் அதிபதி பூமி ( நிலம்) நவாம்சத்தில் அதாவது அம்சத்தில் ரிஷபம் / கன்னி / மகரம் ராசியில் இருந்தால் , ஜாதகருக்கு தமது வாழ்க்கைத் துணை வலிமையாகவும் சக்தி வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார் ஏனென்றால், ஜாதகர் அவரே ஏமாற்றப்பட்டு, பாதுகாப்பற்றவராக இருப்பார் என்ற பயம் இருக்கும்.

ஒருவர் தமது ஜாதகத்தில், ராசி சக்கரத்தில் உள்ள 6 ஆம் அதிபதி காற்று நவாம்சத்தில் அதாவது அம்சத்தில் மிதுனம் / துலாம் / கும்பம் ராசியில் இருந்தால், ஜாதகர் தமது வாழ்க்கைத் துணை நிலையானதாகவும் பொறுமையாகவும் இருக்க விரும்புவார். ஏனெனில் ஜாதகர் அவரே நிலையற்ற தன்மை, ஒழுக்கமின்மை மற்றும் முடிவெடுக்க முடியாத பழக்கத்தால் பாதிக்கப்படுகிறார்.

ஒருவர் தமது ஜாதகத்தில், ராசி சக்கரத்தில் உள்ள 6 ஆம் அதிபதி நவாம்சத்தில் அதாவது அம்சத்தில் கடகம் / விருச்சிகம் / மீனம் ராசியில் இருந்தால் , ஜாதகர் தங்கள் துணையை நேசமான, மகிழ்ச்சியான மற்றும் சமூக நபராக இருக்க விரும்புகிறார்கள், ஏனெனில் ஜாதகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிலையற்ற குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொருத்தம் பார்க்கையில் தோஷ சாம்யம் எனும் ஒரு வித கணிதத்தை அறிந்தால் அவர்கள் எதனால் ஒருவருக்கு ஒருவர் பொருந்தாதவராய் இருப்பார் என அறியவும் அது ஆணை விடப் பெண்ணுக்கு அதிகமான தோஷத்தைக் கொண்டு இருந்தால் ஒரு ஜோதிடர் அவர்களுக்குள் நிச்சயம் பொருத்தம் இல்லை எனக் கருதி சேர்த்து வைப்பது, நிச்சயம் பிற்காலத்தில் பெரிய பிரச்னை தரும் என்பதால் அதனை ஊக்குவிப்பதில்லை. மேற்கூறியவைகள் அனைத்தையும் திருமண பொருத்தத்தின்போதே அறிந்திருந்தால் நிச்சயம் திருமணப் பந்தத்தில் விரிசல் வராமல் தடுக்கலாம்.

"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்."

தொடர்புக்கு: 98407 17857 / 91502 75369

About what you should know when it comes to marriage compatibility..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

மகளிா் கல்லூரியில் தேசிய வணிகவியல் மாநாடு

SCROLL FOR NEXT