ஒருவர் ஜாதகத்தில், 11வது வீடு லாபம் மற்றும் அனைத்து வகையான ஆதாயங்களின் வீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கிரகமும் சில லாபங்களைத் தரும் என்று கூறப்படுகிறது.
இந்த 11 வது வீடு குறிப்பவை ..
இந்த வீடு மூத்த சகோதர சகோதரிகள், நண்பர்கள் மற்றும் சமூக வட்டம், சாதனைகள், ஆசை, விருப்பங்கள், துன்பத்திலிருந்து விடுதலை போன்றவை தருவதாகும்.
இது காலபுருஷ ஜாதகத்தில் சனிக்கு உரிய ஒரு உபசய பாவம் ஆகும். இதன் பொருள் காலப்போக்கில் கிரகங்களின் பலன்கள் மேம்படும். இந்த வீட்டில் ஏதேனும் ஒரு யோக காரக கிரகம் உச்சத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு அதிகப்படியான செல்வமும், சுகமும் கிடைக்கும்.
உதாரணத்திற்கு.. ரிஷப லக்னத்திற்கு 11 ஆம் இடமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் மற்றும் கடக லக்னத்திற்கு 11ஆம் இடமான ரிஷபத்தில் சந்திரன் உச்சம். இவை (சுக்கிரன் , சந்திரன்) அந்த இடங்களில் இருப்பின் அது சிறந்த இடங்கள் ஆகிறது.
11ஆம் வீட்டில் வெவ்வேறு கிரகங்களும், பலன்களும்..
சூரியன்
பதினொன்றாம் வீட்டில் சூரியன், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் உடன் நட்பு, படிப்பில் சிறந்தவர். குழந்தைப்பேறு தாமதமாகும், குழந்தைகள் நன்கு நிலை பெறுவார்கள். ஜாதகருக்கு ஜோதிடம் பற்றிய அறிவு இருக்கும், திடீர் செல்வம் வரலாம், ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் இருக்கும்.
சந்திரன்
பதினொன்றாம் வீட்டில் சந்திரன், செல்வந்தர், கற்றறிந்தவர், அதிர்ஷ்டசாலி, தாய், பெண்கள், தரகு மூலம் ஆதாயம். வெளிநாட்டில் நண்பர்கள் இருப்பர். பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் , மகன்களை விட மகள்கள் அதிகம் இருக்க வாய்ப்பு.
செவ்வாய்
பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் நிலத்தின் மூலம் லாபம், செவ்வாயின் இந்த நிலை, மூத்த சகோதரனுக்கு மோசமானது, குழந்தைகளைப் பெறுவதில் சிரமம். உறவினர்களுடன் பகை, எப்போதும் லாபத்தைப் பற்றி யோசிப்பது, சொத்து மற்றும் வாகனங்களைப் பெறலாம். இத்தகைய ஜாதகர்கள் ஒருபோதும் மற்றவர்களின் செல்வத்தை தங்கள் தொழிலில் முதலீடு செய்யக்கூடாது. பல பெண்களிடமிருந்து பாலியல் இன்பத்தைத் தேடுகிறார்கள். பெண்கள் மூலமும், நெருப்பு மூலமும் ஆபத்தை அடைய நேரிடும்.
புதன்
பதினொன்றாம் வீட்டில் புதன், பல பாடங்களில் கற்றவர், வர்த்தகம் மூலம் லாபம், தொழில் வாய்ப்பு, 34 வயதிற்குப் பிறகு வாழ்க்கையில் செழிப்பு. அவருக்கு வெவ்வேறு சாதிகள், கலாசாரங்கள் அல்லது மதங்களைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பர். குறைவான பசி கொண்டவர், குறைந்த பாலியல் இன்பத்தைப் பெறுகிறார்.
குரு
பதினொன்றாம் வீட்டில் குரு, ஜாதகருக்கு உயர்ந்த சமூகத்தினருடன் நட்பு உண்டு, அதில் கற்றறிந்தவர்கள் இருப்பார்கள். நல்ல அறிவு, நல்லொழுக்கம், மந்திரங்களைக் கற்றவர், வாகனம் பெறுபவர், எளிதில் பலவற்றைப் பெறுபவர், குறைவான குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள், ஆனால் குழந்தைகள் மிகவும் நல்லவர்கள், வாழ்க்கையில் மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
சுக்கிரன்
ஜாதகருக்கு எல்லாவிதமான ஆதாயங்களும் இருக்கும், தீய பெண்களுடன் உறவு இருக்கலாம், அவரது மனைவி மிகவும் நல்லவராக இருந்தாலும், பெண்களை எதிர்த்துப் போராடுவதில் அவருக்குப் பலவீனம் உள்ளது. அவர் கலைகளை விரும்புகிறார் மற்றும் சட்டவிரோத செயல்கள் மூலம் ஆதாயம் பெறலாம்.
சனி
பதினொன்றாம் வீட்டில் சனி இருப்பின், செல்வந்தர், ஆரோக்கியமானவர், நல்ல அதிர்ஷ்டசாலி ஆனால் குழந்தைகளைப் பெறுவதில் சிரமம், மூத்த சகோதரரிடம் கசப்பான உறவுகள் இருக்கும், ஒழுக்கம் குறைவாக இருக்கலாம், கல்வி மற்றும் காதல் விவகாரங்களில் இடைவெளிகள் ஏற்படலாம் . இந்த ஜாதகக்காரர் தனது சகோதர சகோதரிகளுக்குப் பல விஷயங்களைச் செய்யலாம், ஆனால் அவர்களிடமிருந்து எந்த அங்கீகாரமும், பிரதிபலனும் கிடைக்காது.
ராகு
பதினொன்றாம் வீட்டில் ராகு, வெளி ஜாதி, அந்நிய தேசம் மற்றும் அந்நிய மக்களிடமிருந்து ஆதாயம், கல்வியில் பின்னடைவு, குழந்தைகளைப் பெறுவதில் சிரமம், மூதாதையர் சொத்து கிடைக்கும். பெரிய நட்பு வட்டம், காது தொற்று ஏற்பட வாய்ப்பு .
கேது
பதினொன்றாம் இடத்தில் கேது, கல்வியில் பின்னடைவு, குழந்தைகளைப் பெறுவதில் சிரமம், சொந்தக்காரர் செல்வத்தைச் சேமித்து வைப்பார், மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்.
மேற்கூறியவைகளில் அனைத்தும் நிச்சயம் அப்படியே இருக்கும் / நடக்கும். குரு எங்கிருந்தாலும் அவர் எந்த நிலையிலிருந்தாலும் இந்த 11ஆம் இடத்தை பார்க்கும்போது நல்லவைகள் அதிகமாக நடந்தேறும். அது இல்லாமல் இந்த 11 ஆம் இடம் இருபுறமும் பாவர்களால் நெருக்கும்போது நல்லவைகள் குறைய அல்லது தாமதமாகக் கிடைக்க வாய்ப்பு. இயற்கை மற்றும் லக்ன ரீதியான தீய கிரகங்கள் பார்வை, சேர்க்கை இருப்பின் நிச்சயம் தீயவைகள் அதிகமாக நடக்க வாய்ப்பு. எது எப்படி இருப்பினும் ஆடல் வல்லான் ஈசனின் பாதம் பணிவோர்க்கு நிச்சயம் நன்மையே நடந்தேறும்.
ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்.
தொடர்புக்கு : WA 98407 17857, 91502 75369
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.