மீன ராசி 
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: மீனம்

மீன ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை

தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரணருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).

கிரக மாற்றங்கள்

06.03.2026 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் ராசிக்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று ராகு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த வருடம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும் பொறுமையைக் கையாள்வது அவசியம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்துப் பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவைத் தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். நேரத்தை மிகச் சரியான முறையில் கையாண்டு எடுத்த வேலையைக் கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கவும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

பெண்களுக்கு: உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. குடும்பாதிபதி உச்சமாக இருப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் அகலும்.

கலைத்துறையினருக்கு: உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்னை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்ப்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு எதிர்பார்க்கக்கூடிய பதவி உயர்வு உங்களுக்கு வந்து சேரும் கட்சியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும்

மாணவர்களுக்கு: கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்குப் பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். கல்வியில் அளப்பரிய அற்புதமான சாதனைகளை நிகழ்த்துவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்

இந்த வருடம் பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்துக் கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் சாதகமாக இருக்கும்.

உத்திரட்டாதி

இந்த வருடம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதிலிருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும் பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும்.

ரேவதி

இந்த வருடம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்குச் செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாகச் செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாகப் பேசி பழகுவது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு - சந்திரன் - செவ்வாய்

எண்கள்: 1, 5, 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

47% பெண்கள் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு: கனிமொழி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தில்லியில் ஆதவ், ஆனந்த் ஆஜர்! | செய்திகள்: சில வரிகளில் | 29.12.25

2025: மேலும் மோசமான பருவநிலை மாற்றங்கள்! தொடர்ந்த பாதிப்புகள்!!

மனைவிகள் விற்பனை? சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்!

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.98 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT